சாதிக்கும் வரை வாழ்வார்
நெஞ்சத்தில் மெத்தையிட்ட
எத்தனையோ எண்ணமெல்லாம்
பித்தனாகி திரிந்தவனை
வித்தகனாய் மாற்றி விட்டு
கற்றவனின் கல்வியெல்லாம்
காசாக மாறிடவே
அறிவெல்லாம் விரிவு செய்து
அநியாயம் செய்வதுண்டு
ஊராரும் தூங்கிவிட
மோகத்தால் கண் விழிக்க
மதியிருந்தும் முட்டாளாய்
இருள் தேடி மடிந்திடுவான்
விதிவிலக்காய் திகழ்பவரே
வீதிக்கும் விளக்காவார்
நீதிக்கும் பொருளோடு
சாதிக்கும் வரை வாழ்வார்.
Comments