ஆறறிவே ஓர் நாளுணர்வாய்
இதயங்களை இன்பத்தில் நனைத்தாய்
இரவுக்கும் இருளுருவம் கொடுத்தாய்
இரவுக்குள் நிலவாய் ஒளித்து
இதயத்தின் துடிப்பாய் நிலைத்தாய்.
முடிவான வாழ்க்கையின் எல்லை
விடியாத இரவென்றும் இல்லை
புரியாத புதிரால் தொல்லை
விடை தெரிந்தாலது விதியே இல்லை.
இலக்குகள் உள்ளவரை
இறுதியே இல்லை இங்கே
இலக்குகள் இல்லை என்றால்
மரமும் வெற்றுரம் தானிங்கே.
இருளுக்குள் விலங்காய் திரிந்தால்
வெளிச்சத்தில் தடமாய் மாறும்
பட்ட பாதத்தின் காயம் ஆரும்
பலனாய் பலருக்கும் அது பாதையாகிட .
சருகாகி போனால் கூட
இலையாக மீண்டும் மாறும்
விழுதாகி போனால் கூட
விதையாக பிறக்கக் கூடும்.
மண்ணாகி போனால் கூட
மட் பாண்டத்தை ஓர் நாள் சேரும்
ஏதாவ தொன்றாகிடுவாய்
இருதியில் ஏதுமின்றித் தான் போகிடுவாய்.
ஆறறிவே நீயறிவாயோ
இது சத்தியமென ஓர் நாளுணர்வாயோ.
Comments
😀