தாத்தா
நள்ளிரவு நேரத்தில் எத்தனையோ எண்ணங்கள் பித்தனாக்கிவிட யுத்தம் செய்கிறது எண்ணத்தில் என்னவென்று புரியாமல் தள்ளாடும் வயதுடைய அவருக்கு என்னதான் தவமோ ஏதேதோ பிதற்றும் பித்து பிடித்த கிழவனுக்கு சித்தத்தில் சதுராடி யுத்தம் செய்யும் போராளி எதிராளி யார் என்று தெரியாமல் கதறுகிறான் சிலநேர சிந்தை தெளிவு எத்தனையோ காலத்தின் அத்தனை மகிழ்ச்சியையும் அழகாக சொல்லிவிட்டு அந்திகாலம் இதுவோ என்று அவன் கொள்ளும் பயத்தாலே அறிவுரைகள் கொடுக்கின்றான் மூன்று காலில் நடக்கையிலே முக்காலம் உணர்ந்தவனாய் துன்பமின்றி எக்காலமும் நாம் வாழ நல்லதொரு வழிகாட்டி ஆனாலும் அவன் படும் பாட்டை நாம் காண முடியாமல் நாம் கொள்ளும் பயமே உணர்த்துவது அவரின் இக்கால நிறைவை..