அந்தி மாலை
அந்தி சாயும் இந்த வேலை
வானில் எங்கும் மேகமில்லை
அங்கிங்கு தெரியும் கதிரும்
மனதை கொஞ்சம் கவரக் கெஞ்சும்
கண்டு களிக்க கண்விழிக்க
காணுகின்ற வான் திரைக்குள்
எண்ணத்தின் ஏக்கங்களா
மனதுக்குள் மயக்கங்களா
இருளுக்கும் பகலுக்கும்
இடைப்பட்ட வேளையிலே
மனமும் வானும்
எதையோ எதிர்பார்க்க
வாழ்க்கை மட்டும் மனிதனிடம்
வழங்கியதைச் சரிபார்க்க
வாழ்நாளை துணையாக்கி
கடன் பெற்ற பிறப்புக்கும்
கடன் கொடுக்கும் இறப்புக்கும்
இடையினிலே
விருப்பும் வெறுப்பும் பொறுப்பும் துறப்பும்
நட்பும் மகிழ்வும் பகையும் சினமும்
உணர்வென வாழும் உயிரில் புகுந்து
Comments