Posts

Showing posts from March, 2019

' எது அரசியல் அது அறம் செயல் '

உரிமை கோர கூடுகிறோம் ஓட்டை போடா தோடுகிறோம். ஓர் நாள் ஒரு விரல் மையிட்டு மனு கொடுக்காமல் கூக் குரலிட்டு அரசை ஆளத் தெரியா மக்களென நாளும் மக்கிக் கேடாய் மடியும் வரை பற்பல கட்சிகள் பிறந்திடுமே அதிலும் பல பிரிவு இருந்திடுமே இதிலே சாதியும் மதமும் சங்கமிக்க எல்லாம் தர்ம சங்கடமாகிடுமே ஒரு விரல் புரட்சி என்பதெல்லாம் மக்கட் பேர் அணி முயற்சியில் காண்பதுவே காசை கண்ணில் காண்பதற்காய் ஐந்தாண்டினை ஐநூ றாயிரத்திற்கென விற்காதீர் வாக்குறுதிக்கு வாக்குகள் போடாதீர் கோரிக்கை கேட்டுடன் வருவோரை எப்போதும் உதரித் தள்ளாதீர்.

கந்துவட்டி '

தற்கொலையே தீர்வாகி போகுது தரங்கெட்ட கடன் இங்கு தாலி அறுத்து போனது தாய் இழந்த சிறுவன் குரல் கதறலாக ஒலிக்குது. வரமான வறுமையும் வாழ்வை வாட்டி வதைக்குது விழி காணும் இக்காட்சியில் கண்ணீரும் வழிந்து ஓடுது வாய்க்கரிசி சோறு வாங்க கந்து வட்டி காச தேடுது. வளம், நிறைந்த நாட்டுல வறுமை நம்மை ஆளுது. அடிச்சு புடுங்கி சேர்த்தவன் வசதியாக வாழுறான் அசதி கடந்து உழைப்பவன் அடிமாடாய் தேயுறான் - அவனடுத்த  பல தலைமுறையும் அடகு வச்சு போகுறான்.

' தூண்டல் தீண்டும் தீண்டல் '

நவீன உடை உலகமே நாணும் பெண்மை சீண்டலா ஆணாசைத் தூண்டலிங்கு பெண்மை மீது தீண்டலா. மகரந்த சேர்க்கை எல்லாம் பூக்களின் பாகமா மனித உறுப்பு பாகமெல்லாம் கல்வி கற்றலின் பெரும் சாபமா. அம்மா அப்பா விளையாட்டு தவறென்று உரைப்பதில் தவமிருக்கும் காமமும் ஆசை பிறக்கும் வாலிபத்தில் வாழ்வை நாசமாக்குது பெற்றோரும் ஆசானும் கற்று தரா வாழ்வியலால்.

' சபிக்கும் சாபம் '

அவன் இச்சை மிருகம் இது கொச்சை சமூகம் எச்சை துப்ப துடைத்து எரியும் பச்சை பரதேசிகள். பெண்ணை படைத்த இறைவன்  ஆண் ஐக் கேடாய் படைத்ததேன். பால் குடித்தவளின் பருவ உருவம் கண்ணில் படவில்லையா. சல்லாப கிணற்றில் உல்லாசம் தேடும் உதிரம் உனக்கெதற்கு புறத்திலே புணர்ச்சி கொல்லும் விலங்கின் உணர்சியில் பிறந்த நீ பரவாது இறந்து மடிந்திட சாபமே சபிக்கும் சங்கடம் நீ.

' ஒரு விரல் புரட்சி '

விரல் புரட்சியில் விடியலை தேடி வேள்வி விறகென மை விரலாலே வேடமிட்ட அரசியல் வேடரை நோட்டம் விடவே நாட்டம் செலுத்தி அரியணை ஆசையை அடித்து துரத்தி அறியாமை நீக்கிட அறம் அ...