கந்துவட்டி '

தற்கொலையே தீர்வாகி போகுது


தரங்கெட்ட கடன் இங்கு
தாலி அறுத்து போனது
தாய் இழந்த சிறுவன் குரல்
கதறலாக ஒலிக்குது.

வரமான வறுமையும்
வாழ்வை வாட்டி வதைக்குது
விழி காணும் இக்காட்சியில்
கண்ணீரும் வழிந்து ஓடுது

வாய்க்கரிசி சோறு வாங்க
கந்து வட்டி காச தேடுது.
வளம், நிறைந்த நாட்டுல
வறுமை நம்மை ஆளுது.

அடிச்சு புடுங்கி சேர்த்தவன்
வசதியாக வாழுறான்
அசதி கடந்து உழைப்பவன்
அடிமாடாய் தேயுறான் - அவனடுத்த 

பல தலைமுறையும்

அடகு வச்சு போகுறான்.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை