' தூண்டல் தீண்டும் தீண்டல் '
நவீன உடை உலகமே
நாணும் பெண்மை சீண்டலா
ஆணாசைத் தூண்டலிங்கு
பெண்மை மீது தீண்டலா.
மகரந்த சேர்க்கை எல்லாம்
பூக்களின் பாகமா
மனித உறுப்பு பாகமெல்லாம்
கல்வி கற்றலின் பெரும் சாபமா.
அம்மா அப்பா விளையாட்டு
தவறென்று உரைப்பதில்
தவமிருக்கும் காமமும்
ஆசை பிறக்கும் வாலிபத்தில்
வாழ்வை நாசமாக்குது
பெற்றோரும் ஆசானும்
கற்று தரா வாழ்வியலால்.
Comments