' ஒரு விரல் புரட்சி '
விரல் புரட்சியில் விடியலை தேடி
வேள்வி விறகென மை விரலாலே
வேடமிட்ட அரசியல் வேடரை
நோட்டம் விடவே நாட்டம் செலுத்தி
அரியணை ஆசையை அடித்து துரத்தி
அறியாமை நீக்கிட அறம் அறிவுறுத்தி
ஐந்து ஆண்டினை சிந்தையில் இருத்தி
அடிமையன்று என்று தன் மனதில் திருத்தி
செம்மை ஆளுமையில் செங்கோலாட்சி நடக்க
பிரிவினையிலும் பல கூட்டனி பிறக்க
ஆட்சியை மட்டும் மறந்து விட்டு
அனைவரும் ஓரணி ஆகிவிட்டால்
அதிலும் மக்கள் மாபெரும் காரணி ஆகிவிட்டால்
மன்னரை, நாட்டிற்கு நல்லவை
நூறினி செய்ய தூண்டிடுவார்
அதை யாரினி வந்து தடுத்திடுவார்.
Comments