' சபிக்கும் சாபம் '
அவன்
இச்சை மிருகம்
இது
கொச்சை சமூகம்
எச்சை துப்ப
துடைத்து எரியும்
பச்சை பரதேசிகள்.
பெண்ணை படைத்த இறைவன்
ஆண் ஐக் கேடாய் படைத்ததேன்.
பால் குடித்தவளின்
பருவ உருவம்
கண்ணில் படவில்லையா.
சல்லாப கிணற்றில்
உல்லாசம் தேடும்
உதிரம் உனக்கெதற்கு
புறத்திலே புணர்ச்சி கொல்லும்
விலங்கின் உணர்சியில் பிறந்த நீ
பரவாது இறந்து மடிந்திட
சாபமே சபிக்கும் சங்கடம் நீ.
Comments