Posts

Showing posts from May, 2021

ஞாயிறு எனும் நாயகன்

பொன் வண்ணனாய்  வானுலகின் மன்னனாய் ஏழு புரவி வாகனத்தில் ஒளியோடு எழுபவனே துயில் எழும் நேரத்தில்  முகிலுக்குள் முகம் புதைத்து  செங்கதிர் வீசியே உன் மொழி பேசிட உன் வரவெதிர் பார்த்து உலகமே இசை பாட உயர்ந்தோங்கிய பிறப்பெல்லாம் உனதழகை முதல் காணும் நெருப்புக் கோளமாய் நீ சுட் டெரிக்கிறாய் இரவுக்கு மட்டும் ஏன்  இடம் விட்டுக் கொடுக்கிறாய் இயற்கையில் உன்னழகு இன்பந்தரும் பேரழகு நீ உச்சி ஏறுகையில் உன் துயர் தாங்காதிவ்வுலகு. சுட்டெரிக்கும் சூரியன் கதிர் வீசும் கதிரவன் பகலாக்கும் பகலவன் அவன் ஞாலமாளும் ஞாயிறானவன்.

தமிழ் இனிது

மெய்யிருக்கும் உயிரியக்கும் உயிர் மெய்யில் அழகிருக்கும் ! உளத்தோடும் உலகோடும்  உயரிய ஓர் உறவிருக்கும் !! கடல் கடந்த புகழிருக்கும் காவியங்கள் கலந்திருக்கும்  வான் போல எல்லையின்றி ஏராள வரலா றிருக்கும் வாழ்வினை எடுத்துறைக்க அடிகளில் அளவெடுத்து  வளர்ந்திட வழி காட்டி  நடந்திட தடம் கொடுக்கும். வல் லிடை மெல்லினத்தில் விதி முறையுடன் வாழ்ந்திடும் பிறந்தப் பல மொழிகளிலிது மாண்புடை மரபாகிடும். சங்கங்கள் வளர்த்தது  சரவணனின் உயிரிது இனியத் தமிழ் மொழியது இறை அருளிய அகத்தியரால் செழித்தது. நல்வழியில் நாம்நூறு வாழ்ந்திட  நாலடியார ரோடு அகம் புற நானூறும்  அடுக்க முடியாத  அழகிய பல நூல்கள் உண்டு  ஏழு பிறப்பு உடையவனுக்கு ஏலாதி துணையிருக்க  முதிர்ந்த கண்ணி தமிழிலே  மூதுரையின் துணையிருக்க தூவலில் மை எடுத்து  தூவிய பல கருத்துக்கள்  தூணாக நின்று தமிழின் ஊனாக திகழ்வதில் தமிழ் இனிதே....... 

' "கொரோனா" அலை அல்ல வலை '

உயிரை விலையாக்கி காற்றிலே விளைகிறது , வலி தாங்கும் இதயம் இங்கே வளி கிடைக்க வழி தேடித் திரிகிறது. உருவமே இல்லாமல்  உயிருக்குள் உயிர் வாழ்ந்து , உலகத்தை உலுக்க உலாவிப் பரவிடுது. இமைக்குள்ளே குடியிருந்து விழிக்குத் தெரியாத , வலிக்கும் தூசியைப் போல் உறுத்தி உயிர் குடித்து விடும் . இருமலின் இருப்பிடமாய் ,  தும்மலின் துடிப்பிடமாய் , காற்றில் பயணித்து காயத்தை மாயமாக்க , கண்ணாமூச்சி ஆட்டத்தில்  கண்டறிய முடியாத , மக்கள் கடலில் , நோயின் அலையில் , உயிர் மீனை பிடிக்க வரிசையில் காத் திருக்கிறது , கொரோனா என்னும் கொடிய வலை. 

கருப்பு நிறமல்ல தரம்

ஒளிரும் வெள்ளைக்கு கருப்பும் ஓர் காவுதான் இரவின் வருகையால்  வெண்மைக்கும் சாவுதான் . கருப்பில் படியும் வெண்மை நல்ல மொழியை தரும், வெண்மையில் படிந்த கருப்பு  நல்ல விழியைத் தரும் . நிலவை அழகாய் காட்டும் இரவின் இருளே இனிமை , அதை மனிதனை தாண்டி அறியும்  ஆந்தை பிறப்பே அருமை. நீர் தர அக்காற்று மோதும் மேக மூட்டமும் கருமை,  சிரிப்பில் வெண்மை சிறக்க நிறத்தால்  உடலில் உறவு கொள்வதும் கருமை.