தமிழ் இனிது
மெய்யிருக்கும் உயிரியக்கும்
உயிர் மெய்யில் அழகிருக்கும் !
உளத்தோடும் உலகோடும்
உயரிய ஓர் உறவிருக்கும் !!
கடல் கடந்த புகழிருக்கும்
காவியங்கள் கலந்திருக்கும்
வான் போல எல்லையின்றி
ஏராள வரலா றிருக்கும்
வாழ்வினை எடுத்துறைக்க
அடிகளில் அளவெடுத்து
வளர்ந்திட வழி காட்டி
நடந்திட தடம் கொடுக்கும்.
வல் லிடை மெல்லினத்தில்
விதி முறையுடன் வாழ்ந்திடும்
பிறந்தப் பல மொழிகளிலிது
மாண்புடை மரபாகிடும்.
சங்கங்கள் வளர்த்தது
சரவணனின் உயிரிது
இனியத் தமிழ் மொழியது
இறை அருளிய அகத்தியரால் செழித்தது.
நல்வழியில் நாம்நூறு வாழ்ந்திட
நாலடியார ரோடு அகம் புற நானூறும்
அடுக்க முடியாத
அழகிய பல நூல்கள் உண்டு
ஏழு பிறப்பு உடையவனுக்கு
ஏலாதி துணையிருக்க
முதிர்ந்த கண்ணி தமிழிலே
மூதுரையின் துணையிருக்க
தூவலில் மை எடுத்து
தூவிய பல கருத்துக்கள்
தூணாக நின்று
தமிழின் ஊனாக திகழ்வதில்
தமிழ் இனிதே.......
Comments