கருப்பு நிறமல்ல தரம்
ஒளிரும் வெள்ளைக்கு
கருப்பும் ஓர் காவுதான்
இரவின் வருகையால்
வெண்மைக்கும் சாவுதான் .
கருப்பில் படியும் வெண்மை
நல்ல மொழியை தரும்,
வெண்மையில் படிந்த கருப்பு
நல்ல விழியைத் தரும் .
நிலவை அழகாய் காட்டும்
இரவின் இருளே இனிமை ,
அதை மனிதனை தாண்டி அறியும்
ஆந்தை பிறப்பே அருமை.
நீர் தர அக்காற்று மோதும்
மேக மூட்டமும் கருமை,
சிரிப்பில் வெண்மை சிறக்க நிறத்தால்
உடலில் உறவு கொள்வதும் கருமை.
Comments