' "கொரோனா" அலை அல்ல வலை '
உயிரை விலையாக்கி
காற்றிலே விளைகிறது ,
வளி கிடைக்க வழி தேடித் திரிகிறது.
உருவமே இல்லாமல்
உயிருக்குள் உயிர் வாழ்ந்து ,
உலகத்தை உலுக்க
உலாவிப் பரவிடுது.
இமைக்குள்ளே குடியிருந்து
விழிக்குத் தெரியாத ,
வலிக்கும் தூசியைப் போல்
உறுத்தி உயிர் குடித்து விடும் .
இருமலின் இருப்பிடமாய் ,
தும்மலின் துடிப்பிடமாய் ,
காற்றில் பயணித்து
காயத்தை மாயமாக்க ,
கண்ணாமூச்சி ஆட்டத்தில்
கண்டறிய முடியாத ,
மக்கள் கடலில் ,
நோயின் அலையில் ,
உயிர் மீனை பிடிக்க
வரிசையில் காத் திருக்கிறது ,
கொரோனா என்னும் கொடிய வலை.
Comments