சரஹணபவனே
நல்ல வாழ்க்கை தந்த உன்னை நன்றியோடு நாயப் போல சுத்துவோம் இருந்தாலும் மனை மக்கள் மனைவிக்காக மனமுருகி உன்ன வேண்டுவோம் விக்கல் சிக்கல் வந்தாக்கா திக்கி திணறி கத்துவோம் சுப்பனும் அப்பனும் இருக்கும் போது நிச்சயமா சூப்பராக சுத்துவோம் பட்டை இட்டு மாலை போட்டு அரோகரா போடுவோம் பக்தியோடு உன்ன காண பாதை யாத்திரையில் நாடுவோம் செம்பு முருக வேலவா செங்குருதி நீ அலாலவா சிறுவாபுரி வேலவா சிறுவனுக்கருள் செய்யவா சிரத்தின் மேலே சிக்கல்லிருக்க சிரிகிரியான் காக்கனும் திட்டமிட்டு வாழ்வை நகர்த்த திண்டல் முருகன் தன் கண்ணை காட்டனும்