Posts

Showing posts from November, 2025

ஆயுள் திருடி

காதல் சித்திரவதையில்  காலம் முழுதும் நானும் வாழ  ஆயுள் கைதியாகிறேன்  அவளின் இதயத்துடிப்பில்  இதயம் வெடிக்கும் கணத்தில்  உன்னை நினைத்து தவிக்கும் உயிராய்  எங்கும் நிறைந்த நினைவில்  எல்லாம் ஆன உன்னை  என்று நான் வந்தடைவேனோ  என்னவளாய் இருப்பவளே  எனக்காய் ஒரு வரம் கொடுப்பாய்  ஏக்கத்தை ஏற்படுத்த  அன்பினால் தாக்கம் செய்தவளே  அத்தனைக்கும் அப்பாலான  இந்த ஆண்பாலின் ஆதாரமே  சித்தனுக்குள் ஏற்பட்ட பித்தம் போலே  நித்தம் நித்தம் கொல்லும்  உந்தன் அழகை என்ன சொல்ல என் ஆயுள் திருடிய தேவதையே

எட்டுக்குடி குமரா

எட்டுக்குடிக்குள்ள இருந்து என்னை கட்டிஇழுப்பவனே தொட்டு அனைத்திடும் அன்னை சுகம் தன்னை நீயும் தருபவனே மொட்டை தலையிணை கொட்டித் தொட்டு விடும் மழைத்துளி போலே உன்னருளாய் நான் உணர்வேன்  நான் தொடுமுன் திருவடியாலே விட்டு பிரிந்திடும் கெட்ட உலகிதில் விட்டுப் பிடிப்பவனே என்னைக் கட்டிப்பிடிப்பவனே உயிரைக் தொட்டுப் பிடிப்பவனே பட்டு சாத்தி உன்னை பச்சக்கொழந்தையாய் பார்க்க நினைக்கிறேன்  உன் அப்பன் சிவன் உன்னை  அரசனாக்கி அழகு பார்க்கிறனே காத்துல பறக்கும் தூசியும் கூட  திருநீ..று வாசமாகுதே காலு கழுவுற தண்ணீருல மீனும்  கால கடிக்கிறதே எந்தன் பாவம் அழிக்கிறதே

முருகக்காதல்

முருகக் காதல் கொள்ளு  உள்ளம் நிறைய அவன்  பெயரைச் சொல்லு பாலைக் குடத்தில் மொள்ளு  மெல்ல அவன் திருவடி நோக்கிச் செல்லு  சன்னதியில நில்லு உன் சங்கடங்களை  மனதார அவன் காதில் சொல்லு இஷ்ட பட்டு சொல்லு கந்த சஷ்டி கவசம் உன்னை  காக்கும் தள்ளு காவடி சுமக்கும் தோளு கந்த கருணாகரன்  துணை ஆகிடும் வேலு குடத்தில் அபிஷேக பாலு அதை தலையில் தூக்கி  நடக்குமைய்யா எந்தன் காலு

வளைகாப்பு

மூன்று திங்கள் அன்புக்குள்ளே  பத்து திங்கள் முத்து அதை பத்திரமாய் பெற்றெடுக்க காத்திருப்போர் காலத்துக்கு எதிர்பார்திருப்போர் ஏக்கத்துக்கு கருவறைக்குள் கவலை தீர்க்கும் கடவுள் தனை தாங்கும் அன்னைக்கென எழுபிறப்பில் அவள் பெரும் ஏழாம் மாத ஏகாந்தமாய் கை நிறைய வளையல் பூட்டி  குதூகல கூத்தாடும்  குல மகளின் உள நெகிழ்வை  குறிக்கும் இருமன இணைவில் உதிக்கும் உயிர் வயிற்றுக்குள் துடிக்கும் பெரும் சுகத்தோடு  உதைக்கும் அசைவுகளுள் அன்னைக்குள்ளே அண்டம் கொண்ட அழகு குழந்தை தெய்வம் எனில்  அன்னையவள் அதற்கும் ஓர் படி மேலல்லோ

மாளிகை

மாளிகையில் இருக்குறதாருட நீயும் ஒரு நாள் வாழ்த்துப் பாரடா பணம் இருக்குறவன் படுகிற பாட்டை பார்கிற விழிகளோ கணக்குப் போடும் நாட்டை அவனுக்கென்ன குறைச்சலென்று  உரைக்கும் மொழிகள் அறியாது இறக்கும் வரையில் இருக்கும் உயிரென  உணர்வும் எண்ணத் துணியாது  செல்வம் கொட்டிக் கிடக்குது என்று  வெட்டிக் கதைகள் பேசிடுவார் மூளையை முதலீ டாக்கிய மனிதனை  யார் தான் இங்கே போற்றிடுவார்  ஏழ்மையில் வாழ்ந்து எளிய முறையில சேமிச்சு தலைமுறைகள் தலைநிமிரும் நேரம் வரை  தானும் அடக்கி தான் வாசிச்சு ஆதாரக்கல்வி அறிவால உழைப்பின் மூலாதாரத்த உலக மக்களுடன் முட்டிமோதி  உயர் இடத்தை பிடிக்க தானும் போராடி மேலேறி வந்தவுடன் வளருகிற செருக்ககற்றி மனிதத்துடன் வாழ்ந்தாலே மாபெரும் சாதனையே மாளிகை என்பது மனிதர்க்கு கடனில்லா வாழ்க்கையில் கட்டாந்தரை சுகத்தோடு  ஒழுகாத கொட்டாக்குள் ஒழுக்கமாய் வாழ்வதுடன் வாடகை வீடானாலும் வறுமையும் கடனும் நோயும் இன்றி வாழ்வோரெல்லாம் மாளிகையில் வசிப்பவரே‌