Posts

Showing posts from April, 2018

' விவசாய நாடு விஷங்களால் கேடு '

மரபணு மாற்று விதைகளெல்லாம் மண்ணையும் நம்மையும் மலடாக்கும். எண்டோ சல்ஃபான் தெளிப்பதெல்லாம் உடலுயிரை நச்சுக்கு இறையாக்கும். கசப்பு தன்மை காய்களெல்லாம் கடும் நஞ்சையும் எதிர்த்து நன்மை செய்யும். மழை நீர் பாசனம் செய்திருப்பீர் வேளான் தந்தையின் சிறுநீர் பாசனக் கூற்றை எடுத்துரைப்பீர். யூரியா தெளித்துப் பார்க்கிறோம் விதைக்கே விஷத்தை விதைக்கிறோம். கருச் சிதைவை காண்கிறோம் எமனையும் எதிர்க்கும் எருவை வெறுக்கிறோம்.

' ஏழையின் சிரிப்பில் '

காளைய களத்தில் விட்டு ஏர் கலப்பை நிலத்தை தொட்டு எங்கெங்கும்  விதைகளிட்டு எப்பொழுதும் வியர்வை விட்டு பயிருக்கு உயிரை விட்டு பசி போக்க பாடு பட்டு வறப்புக்கு வழிய வெட்டு வளம் பெற வழியும் விட்டு பசுமைக்கு படையலிட்டு பாட்டு இட்டு கட்டிகிட்டு பாடுபட கத்துகிட்டு தண்ணீருக்கு கண்ணீர் விட்டு தாகமெல்லாம் தாங்கிகிட்டு தெய்வம் கைய விட்ட பின்னும் தேகம் ஒன்ன வச்சிகிட்டு தினந்தோறும் உழைக்கிறான் ஏழை சிரிக்கும் போது நிலைக்கிறான்.

' கொடுமை '

அஞ்சுக்கு ஒன்னுடா ஆயிசுக்கும் அடிமைடா பொத்தான அழுத்திட்டு பொத்திகிட்டு இருக்கோம்டா ஒட்டு மொத்த வாழ்க்கையும் ஓட்டப் போட்டழிஞ்சி போதுடா பணப் போதை வந்துட்டா பாதை மாத்திப் போதுடா காணி நிலமிருக்குடா ஏர் கலப்பை இல்லடா மீத்தேன் ஹைட்ரோ கார்பனெல்லாம் மண்ணுக்குள்ள இருக்குடா மனுசன் உசுரு வாழ்க்கையும் மண்டிடயிட்டு கெடக்குடா. பச்சையாக பேசுறான்  பதவியில இருக்குறான் பச்சத்தமிழ் விவசாயி  பட்டினியால் சாகுறான் அங்கங்க நடக்குது அடிவயித்த கலக்குது தகப்பன்னு தப்பு பண்ணுறான் தப்பிக்க பாக்குறான் காவல்காறன் போர்வையில் காம காவு கேக்குறான் கல்வி கத்து குடுக்க சொன்னா கலவி கத்து குடுக்குறான் காதலிக்க மறுத்தாக்க கத்தியில குத்துறான் .

' மேயும் ஆட்டை மேய்க ஆட்கள் '

ஹார்ட்டு உள்ள மனுசன ஆடு மேக்க விக்கிறான் அர லட்சம் வாங்குறான் அவன் லட்சியத்தை கெடுக்குறான் பெத்தெடுத்த புள்ளைய வித்து தின்ன பாக்குறான். மனமுள்ள மனுசன பணம் ஆட்டி படைக்கிது பரந்த விரிந்த நாட்டுல பரதேசித்தனம் வளருது. காகித காசுக்கு ஆசைபட்ட அப்பனின் மாசுக்கு,  தண்டனை தாண்டித் தரம் கெட்டது  காசின் கால் தூசுக்கு. 

' கல்லூரிக் கவலை '

அறிவு புகட்டும் ஆசான் தொழில் ஆபாசமூட்டுது, அறம் ஊட்டும் ஆசானுக்கு அவம் சேர்த்துப் போகுது, அதிகம் படித்த மமதையில் அழிவை தேடி ஓடுது, அதிகார கும்பலும் அநியாயம் பண்ணுது, கல்வி நிலையம் கூட இங்கு கலவி நிலையம் ஆகுது, காசுக்காக கல்வியையும் கருவியாக்கி பாக்குது, சட்டத்தின் சட்டை பையில் சாக்கடைகள் ஓடுது, செத்து பிழைக்கும் தமிழகமே டீ கடை போலாகுது, அடுத்தடுத்த நொடியில அதிர்ச்சி வந்து தாக்குது, குரு புத்தி கூட இப்ப குறுக்கு புத்தியாகுது.

' தாமிரமா தமிழ்நாடா '

கடலலை வீசிய ஊரும் கண்ணீரில் மூழ்கிப் போகும் தாமிரம் உருக்கு ஆலை மெல்ல உயிரைக் குடிக்கும் நாளை கருதரிப்பை நினைத்த மனம் கருச்சிதைவை எண்ணி அழும் நெஞ் செரிச்சலினால் பலர் வாட அணி திரண்டனர் எதிர்த்து போராட மூச்சு திணரல் கொடுத்த கொடுமை கோப உணர்வைத் தூண்டிட  மக்கள் போராட்டம் அதை காட்டிட அரசாங்கம் இருந்தது  அதிகாரம் அடக்குது ஆதய அரசியலில்  அடிபணியும் மக்களுக்கு - எப்போதுமே அநியாயம் நடக்குது.

' காவிரி '

அரசியலாக்கி வேடிக்கை அதில்  இயற்கையின் பாடு கேளிக்கை உறைந்து போகும் உதிரம் உயிர் உள்ள வரை கதரும்  குடகில் அடகு வைத்தோம் தமிழகத்தின் அழகை காத்தோம் தடை தாண்டிய காவிரியாரும் எங்கள் தாகம் தீர்த்திட கூடும் காடுகள் கடந்து காவிரி படர்கிறது  பல உயிரும் அதற்கென துடிக்கிறது வறட்சியை கண்டது கண்கள் வடி நீரை வடிக்குது விழிகள் பாரத தாய் திரு நாடு அதில்  தமிழகம் படுகிரதுப் பெரும் பாடு இயற்கையும் வாழ வழியில்லை மழை பெய்யும் அளவு வளமில்லை மழை நீரை தேக்கிட மனமில்லை மதி தேடும் அவலத்தில் பணத் தொல்லை காசுகள் ஊட்டிய மாசு குணம் இயற்கையை மறந்தால் மனிதன் பிணம்  அறம் செயல் , அரசியலானது அவச் செயலா வாக்கை செலுத்தி வாழ்வு முழுவதும் அடிமையாய் வாழ்வதே நம்செயலா ?