' கல்லூரிக் கவலை '
அறிவு புகட்டும் ஆசான் தொழில் ஆபாசமூட்டுது,
அறம் ஊட்டும் ஆசானுக்கு
அவம் சேர்த்துப் போகுது,
அதிகம் படித்த மமதையில்
அழிவை தேடி ஓடுது,
அதிகார கும்பலும்
அநியாயம் பண்ணுது,
கல்வி நிலையம் கூட இங்கு
கலவி நிலையம் ஆகுது,
காசுக்காக கல்வியையும்
கருவியாக்கி பாக்குது,
சட்டத்தின் சட்டை பையில் சாக்கடைகள் ஓடுது,
செத்து பிழைக்கும் தமிழகமே
டீ கடை போலாகுது,
அடுத்தடுத்த நொடியில
அதிர்ச்சி வந்து தாக்குது,
குரு புத்தி கூட இப்ப
குறுக்கு புத்தியாகுது.
Comments