' காவிரி '

அரசியலாக்கி வேடிக்கை அதில் 
இயற்கையின் பாடு கேளிக்கை

உறைந்து போகும் உதிரம்
உயிர் உள்ள வரை கதரும் 

குடகில் அடகு வைத்தோம்
தமிழகத்தின் அழகை காத்தோம்

தடை தாண்டிய காவிரியாரும்
எங்கள் தாகம் தீர்த்திட கூடும்

காடுகள் கடந்து காவிரி படர்கிறது 
பல உயிரும் அதற்கென துடிக்கிறது

வறட்சியை கண்டது கண்கள்
வடி நீரை வடிக்குது விழிகள்

பாரத தாய் திரு நாடு அதில் 
தமிழகம் படுகிரதுப் பெரும் பாடு

இயற்கையும் வாழ வழியில்லை
மழை பெய்யும் அளவு வளமில்லை

மழை நீரை தேக்கிட மனமில்லை
மதி தேடும் அவலத்தில் பணத் தொல்லை

காசுகள் ஊட்டிய மாசு குணம்
இயற்கையை மறந்தால் மனிதன் பிணம் 

அறம் செயல் , அரசியலானது அவச் செயலா
வாக்கை செலுத்தி வாழ்வு முழுவதும்
அடிமையாய் வாழ்வதே நம்செயலா ?

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை