' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '
முற்காலம் அக்காலம் பொற்காலம்
எக்காலம் நற்காலம் எதிர்காலம்.
முற்காலம் முதல் தோன்றிய கற்காலம்
அக்காலம் மரப் பட்டையை
உடலின் சட்டையாய் மாற்றிய பொற் காலம்
இக்காலம் தற்கொலையில் விவசாயம்
எக்காலம் பசுமையோடு விழித்து எழும் நிலச்சாயம்
பக்க விளைவில்லா விஞ்ஞானம் தந்தாலே நற்காலம்
கற்காலம் கடந்தார் போல்
புதுமையுடன் பொற்காலம் தோன்றி
அக்காலம் அழிவில்லா விவசாயம் தாண்டி
அதற்கு அரசின் நல் விசுவாசம் ஊன்றி
உல்லாச வாழ்விற்கு விளைவில்லா விஞ்ஞானம் வேண்டி
இத்தனையும் நம் துனையால்
உலகிற்கு கிடைத்துவிடில்
அப்போதே கை கூடும்
கனவு கண்ட எதிர்காலம்.
முப்பொழுதும் நிலைபெற எப்பொழுதும் உழைத்திடவே
ஒருவருக்கொருவர் துணையாய் நின்று
இப் பூவுலகை நாம் காத்திடவே.
Comments