மலை உடஞ்சி மண்ணா போச்சு

மலையில் விடுபட்டு 
பாறையாய் பிறப்புற்று
விரிசலில்  உடைபட்டு
மழையில் அரிப்புற்று
அருவியோடு விழுந்து
ஆற்றோடு கலந்து 
கடலோடும் பொழுது
கரை ஓரம் படர்ந்து
கதிரொளியில் காய்ந்து
காற்றுத் துகளாகி
அந்தரத்தில் பயணித்து
மெல்ல நகர்ந்து 
புயலில் புலம் பெயர்ந்து 
நிலத்தை குடியாக்கி
குடியை குழியாக்கி
நீரை நீ தேக்கி
செடி வளர 
வளம் சேர்த்து
மனித பிறப்புக்கு
மானமும் பசியும் 
மரத்தால் மறைய
விளை நிலத்தின் மூலாதாரமாய் 
மனிதன் காலுக்கடியில் கிடந்து
இத்தனையும் தாங்கி
எல்லோரின் வசைபாடலுக்கும்
மண்ணு எனும் வார்த்தைவழி 
வாழ்வாங்கு வாழ்கின்றாய்

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை