விடுதலை பறவை
வள்ளுவனாம் வள்ளல் - வார்த்தை
தந்து செல்லும் துள்ளல்
அதிகாரம் அறிந்து கொள்ளல்
தீமையாகும் பிறரை கொல்லல் .
தமிழின் ஓசைக்கும்
தமிழ் மேலுள்ள ஆசைக்கும்
மீசைக்கு சொந்தக்காரனை
அடையாளம் ஆக்கிவிட்டோம்.
தமிழும் தலையெடுத்தது
விடுதலைத் தலையெழுத்தும்
திருத்தி உயிர்தெழுந்ததை
திரும்பிப் பார்க்க வைத்தான்.
யாருடா பாரதி
தமிழ் தேருக்கு சாரதி.
மூட நம்பிக்கை தீமிதி
முடிவெடுக்கும் முன் தாமதி
காற்று வெளியிடை
காணம் கேட்கிறது
மாற்றி யோசியென
மனமும் துடிக்கிறது .
பரந்த உலகினில்
என்செவி பரவுமிடமெலாம்
பறவை மொழியது
விளிக்கும் கதையது
பாரதத்தின் சரித்திர சுதந்திரம்
Comments