Posts

Showing posts from March, 2020

நாற்காலி தேவை

முக்கால நம்ம வாழ்க்கையில ஆட்டி படக்கிது நாற்காலி பொற்காலத்த உதறி தள்ளி  தேடி போறான் டா என் சோக்காளி சோத்த திங்க இந்த  சேத்தில் கால அவன்  வச்சத எல்லாம் மறந்துட்டான் ஊர காப்பாத்த கிளம்பிட்டான் உடல் சூடு தனிந்திட  பழைய சோத்து குள்ள  பச்ச வெங் காயத்த  வச்சி திண்ணதையும் மறந்துட்டான் ஓடுன ஆத்துல  ஓடி குதிச்சு விளையாடின இடத்த  தேடுறான் வறண்ட பூமி கண்டு இவன் வாடுவான். 

மனிதம் மலரட்டும்

அறம் செய்திடவே தரம் தாழ்ந்திடுவோம் தற்புகழ் மறந்தே தானஞ் செய்திடுவோம் கரம் கொடுத்தே நாமுதவிடுவோம் சினங்கடந்தே சில தொண்டுகள் செய்வோம் மனமுடைந்தோர் மறு வாழ்வு பெற ஆறுதலை நல் வாக்கு செய்யும் வழி மாறித் தடம் மாறுகையில்  கல்வியால்  நல்வழி காட்டிடுவோம் கற்றறிவால் புதிதொரு விதிசெய்வோம் உணவோ டுடுக்கை இல்லா உயிர்கட்கு எடுத்திறைத்திடும் நல்மனம்  நம்முள் விதைத்திடுவோம்.  செருக்கை செருப்பாய் எண்ணிவிட செருப்பாவோம் தலைமேலதுவும் ஏறிவிட்டால். ஈகையில் இன்முகப் புன்னகை  பார்திடுவோர்   இறைவனை அவரினில் கண்டு மகிழ்ந்திடவே.  உயிரினும் மனிதம் உயர்வென மறவாமல் உயிர் போகும் நிலையொரு உடற்கண்டு உதவிக்கரம் தனை நீட்டாமல் உற்ற பொழுதில் கண்டுங் காணாமல் நமக்கது நிகழ்கையில் உணராமல்  மானுடம் வளர மனிதம் மலர்ச்சி அடையட்டும்.  இருக்கும் வாழ்க்கை இறப்பதற்கே அதில் தேவைக்கதிக மிருப்பது இறைப்பதற்கே வலிகள் வரும் வழி பலவிருந்தும் வாழ்வு நல்வழி ஆவது ஈகையிலே மனித நேயம் என்பதிங்கு  மனிதற்கானது மட்டுமல்ல  எல்லாமு...

வேலவா

வேலோடு வந்தவனே வேதனையை அழிப்பவனே  வள்ளி மணவாளனனே வலிமை தனை தருபவனே மயில்மேல் வந்தவனே மனக் குறையை தீர்ப்பவனே  பன்னிரு கையனே பரமசிவன் பாலகனே என்கன் முருகனே நீ என் கண் காப்பவன் நீ ஆறிரு கை கொண்டவனே  ஆறு படை வசிப்பவனே குன்றெல்லாம் குமரன் குடி கையில் கொண் டிருப்பான்  அந்த சேவல் கொடி அவன் பேர் தான் முருகனடி . கந்தா போற்றி  கடம்பா போற்றி வேலா போற்றி பாலா போற்றி

முருகா

முருகா உன் அருளாலே மயிலாகி போனாலே  என் மீது உனை சுமப்பேன் வின் மீதும் நான் பரப்பேன்  கலியுகத்து வலி எல்லாம் உன் கருணை கடை விழியாலே  காணாமல் போகிவிட  கந்தா உன் அருள்  வேண்டும்  அப்பனுக்கு பாடம் சொன்ன சிவன் அவனின் ஆசானே ஆண்டியாக இருந்தாலும்  அண்டி வரும் அண்பருக்கு  அருள் தருவாய் எங்கள் அழகா சிக்கலினை தீர்ப்பவனே  சிங்கார வேலவனே  சாட்சியாகி காட்சி தரும் எங்கள் சாமி தானே 

சிகரெட்

ஐ விரலிடையே ஆறாம் விரலாய் கை விரலிடையே காலனின் வரவாய் எரியும் தீயால்  உயிரை எரித்து  சிதரும் சாம்பல் இறுதி உணர்த்த சிரித்தே புகைத்து சிதைந்தே அழியும் சிந்தை மழுங்கி  காயச் சிறையில் காலங் கடந்து நோயின் பிடியில்  கருகும் வரையில் சிக்கி தவிக்கும்  மனமோ இதனை இன்ப களிக்கும்.