முருகா
முருகா உன் அருளாலே
மயிலாகி போனாலே
என் மீது உனை சுமப்பேன்
வின் மீதும் நான் பரப்பேன்
கலியுகத்து வலி எல்லாம்
உன் கருணை கடை விழியாலே
காணாமல் போகிவிட
கந்தா உன் அருள் வேண்டும்
அப்பனுக்கு பாடம் சொன்ன
சிவன் அவனின் ஆசானே
ஆண்டியாக இருந்தாலும்
அண்டி வரும் அண்பருக்கு
அருள் தருவாய் எங்கள் அழகா
சிக்கலினை தீர்ப்பவனே
சிங்கார வேலவனே
சாட்சியாகி காட்சி தரும்
எங்கள் சாமி தானே
Comments