சிகரெட்

ஐ விரலிடையே
ஆறாம் விரலாய்
கை விரலிடையே
காலனின் வரவாய்
எரியும் தீயால் 
உயிரை எரித்து 
சிதரும் சாம்பல்
இறுதி உணர்த்த
சிரித்தே புகைத்து
சிதைந்தே அழியும்
சிந்தை மழுங்கி 
காயச் சிறையில்
காலங் கடந்து
நோயின் பிடியில் 
கருகும் வரையில்
சிக்கி தவிக்கும் 
மனமோ இதனை
இன்ப களிக்கும்.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை