Posts

Showing posts from July, 2020

காமராசர்

சிந்தை சிறப்புற  சீற்றம் கிளர்ந்தெழ  மந்த புத்தியை கந்தலாய் கிழிக்கும், கல்வி ஒருவருக்கு கால முழுதிலும் வாழ்வின் வரமாக தாழ்மை நிலை போக்க, தர மானசீருடடை தந்து சாவை தடுத்திட சத்துணவு தந்து, வயிற்றுப் பசி போக்கி வளம் தரும் நீர் நிலையும் தந்தாய். பொருள் தேடுவோர்க்கு  நற் தொழில் தந்து, பட்டறிவுச் சமூகத்தில்  படிப்பறிவு தந்தவனே, வெட்டவெளி காற்றினிலே காலா காந்தி கானமடா அறியா மைக் காரிருள் கண்ட கல்விக் கண் திறந்த கருப்புத் தங்க ஜோதியடா, காலனின் காலடி சேர்ந்தாலும்  காலமும் உன் புகழ் பாடுமடா.

இறப்பின் தத்துவம்

சொந்தம் உடன் வராது  சொத்தும் உடன் வராது  பந்தம் உடன் வந்தாலும் படுகுழி இடம் தராது.  ஆசை உடன் வராது  இச்சை உடன் வராது  இறைவா என் றழைத்தும் இறப்புக்கு இடர் வராது.  வறுமை வளம் தராது சிறுமை குணம் தராது  கர்வம் அடைந்தாலும் காலனை கடந்திடாது. வாழ்க்கை புரிந்திடாது ஏழ்மை நிலைத்திடாது  இழவது வரும் வேலை இருபதும் இனித்திடாது.   மிகுதியை உதவிடவே தகுதி தகுதியல்ல. இறப்பின் தத்துவத்தில்  இருப்பது உறுதியல்ல இறப்பது இறுதியல்ல.

ஈசா

சாந்தமாகி சாம்பலாகி பித்தனுக்குள் சித்தனாகி சிரசணிந்த கங்கை நீரும் பாவம் போக்கி வைக்குமே. கழுத்தை சுற்றும் நாகமுண்டு கண்களங்கு மூன்று உண்டு கைகளிலே உடுக்கை கொண்டு சூலம் கண்டு கொள்ளவே சூழ்ச்சி நீங்கி போகுமே. பெருங்கடலாம் இப்பிறவி அகத்தியரை தந்துதவி அகமகிழும் தமிழும் தந்து இச் சகத்தில் ஆள வைத்தவா. சங்கரனே வேதமாகி சங்கரிக்கு நாதனாகி ஐங்கரனின் தந்தையாகி விந்தையான சிவனே  எந்தன் சிந்தையாகிறாய்.  ஆறு முகனின் சீடனாகி தில்லை யம்பல நடராஜனாகி ராவண சிவதாண்டவத்தை லயித்த லங்கேசனாகி நின்றவா. நாதியற்று நாங்கள் தேடும் நாதனாகி நின்ற நீரே அர்தனாரி பிறப்பெடுத்த ஆதியந்த மற்றவா. விந்தையான உலகில் எந்தன் தந்தை என்று சொல்லுமுன்பு தந்தைக்கும் தந்தையான உன்னை எண்ண மறக்கவில்லையே.

உறக்கம் உயிர் வாழும்

கண்ணுக்கும் இமைக்கும் இடைப்பட்ட உறவாகும் நாமே நம்மை மறக்கும் துறவாகும் மனமுணறா கண் காணும் ஒய்வெனும் மருந்தாகும்.  விழித்தாலும் உழைத்தே களைத்தாலும் ஓயாத உடலுக்கும் ஏவலிடும் மூளைக்கும் இரவிலும் பகலிலும் படுத்தால் பயனளிக்கும். தாலாட்டு கேட்டாலே தானாக விழி மூட காணாத கற்பனைகள் கனவில் நாடகமாட மயக்க நிலை ஊனோடு உயிர் சுவாசம் மன்றாட மற்றவரின் கண்களுக்கு நான் சவமல்ல என சான்றளிக்கும் சுவாசத்தில் இயங்கி  அசைவுகளை அடக்கி உடல் செத்தார் போலிருக்க  உறக்கம் மட்டும் உயிர் வாழும். 

காண்பது கனவா.......

பக்கம் பட்டுப் போன செடி உயிர் பெற்று வந்தது மொட்டு மலர்ந்ததனால்.  நிர்வான மரத்துக்கு ஆடை ஆனதிங்கு  பச்சை இலைகள் தானே. ராக்கோழி சத்தத்தில்  இரவின் யுத்தத்தில் நிலவும் மறஞ்சுபோச்சு.  நாவுடன் நானும்  சேர்ந்து சுவைத்திட கற்கண்டு உடலுமாச்சு. கட்டி பிடிக்கையில் கட்டு உடலது கணம் கனத்துப் போச்சு. மொட்டு உடலது மெட்டு இசைத்திட கட்டில் கானமாச்சு.  தொட்டு பார்த்தவுடன்  மின்சாரம் பாயுதடி சந்தேகமல்லயிது காமன் வீடுதான் டி.  குழலின் வாசத்தில் குரலின் முனகலுடன் குடியேறும் வேளை தான் டி. கறைந்த பரவைகளால் விழித்து பார்த்ததும் எல்லாமும் கனவுதான் டி. 

திருமணத் தீர்வு

பல்லாயிரம் பெண்களை பார்த்திடவே  கன்னியர் கண்களில் கண்கள் கலந்திடவே மயக்கம் தயக்கம் வந்தடையும் மங்கையின் மதிமுகம் மனங்கவர. எண்களிருந்து என்ன பயன்  எதற்கும் அடங்கா பேரழகின் முன்னே சொற்கள் இருந்து என்ன பயன்  சொக்க வைத்திடும் நாணச் சொர்க முன்னே. ஊடல் உடலில் ஊடுருவ  அரவணைத்திட இரு கை காத்திருந்து கை கோர்த்திட சித்தக் கிறக்கத்தால் காமம் சிதைந்து சிரித்துச் சிதறும் சில்லறையாய் . முறை அற்ற தகாத உறவதனில்  முகம் சுளிக்கக் காரியம் செய்வதற்கு வளரிளம் பருவ வரவதனில் மணவாழ்க்கை என்பது தீர்வாகும்.