காண்பது கனவா.......
பக்கம் பட்டுப் போன செடி
உயிர் பெற்று வந்தது
மொட்டு மலர்ந்ததனால்.
நிர்வான மரத்துக்கு
ஆடை ஆனதிங்கு
பச்சை இலைகள் தானே.
ராக்கோழி சத்தத்தில்
இரவின் யுத்தத்தில்
நிலவும் மறஞ்சுபோச்சு.
நாவுடன் நானும்
சேர்ந்து சுவைத்திட
கற்கண்டு உடலுமாச்சு.
கட்டி பிடிக்கையில்
கட்டு உடலது
கணம் கனத்துப் போச்சு.
மொட்டு உடலது
மெட்டு இசைத்திட
கட்டில் கானமாச்சு.
தொட்டு பார்த்தவுடன்
மின்சாரம் பாயுதடி
சந்தேகமல்லயிது காமன் வீடுதான் டி.
குழலின் வாசத்தில்
குரலின் முனகலுடன்
குடியேறும் வேளை தான் டி.
கறைந்த பரவைகளால்
விழித்து பார்த்ததும்
எல்லாமும் கனவுதான் டி.
Comments