இறப்பின் தத்துவம்
சொந்தம் உடன் வராது
சொத்தும் உடன் வராது
பந்தம் உடன் வந்தாலும்
படுகுழி இடம் தராது.
ஆசை உடன் வராது
இச்சை உடன் வராது
இறைவா என் றழைத்தும்
இறப்புக்கு இடர் வராது.
வறுமை வளம் தராது
சிறுமை குணம் தராது
கர்வம் அடைந்தாலும்
காலனை கடந்திடாது.
வாழ்க்கை புரிந்திடாது
ஏழ்மை நிலைத்திடாது
இழவது வரும் வேலை
இருபதும் இனித்திடாது.
மிகுதியை உதவிடவே
தகுதி தகுதியல்ல.
இறப்பின் தத்துவத்தில்
இருப்பது உறுதியல்ல
இறப்பது இறுதியல்ல.
Comments