உறக்கம் உயிர் வாழும்
கண்ணுக்கும் இமைக்கும் இடைப்பட்ட உறவாகும்
நாமே நம்மை மறக்கும் துறவாகும்
மனமுணறா கண் காணும்
ஒய்வெனும் மருந்தாகும்.
விழித்தாலும் உழைத்தே களைத்தாலும்
ஓயாத உடலுக்கும் ஏவலிடும் மூளைக்கும்
இரவிலும் பகலிலும் படுத்தால் பயனளிக்கும்.
தாலாட்டு கேட்டாலே தானாக விழி மூட
காணாத கற்பனைகள் கனவில் நாடகமாட
மயக்க நிலை ஊனோடு உயிர் சுவாசம் மன்றாட
மற்றவரின் கண்களுக்கு நான் சவமல்ல என சான்றளிக்கும்
சுவாசத்தில் இயங்கி
அசைவுகளை அடக்கி
உடல் செத்தார் போலிருக்க
உறக்கம் மட்டும் உயிர் வாழும்.
Comments