காமராசர்
சிந்தை சிறப்புற
சீற்றம் கிளர்ந்தெழ
மந்த புத்தியை
கந்தலாய் கிழிக்கும்,
கல்வி ஒருவருக்கு
கால முழுதிலும்
வாழ்வின் வரமாக
தாழ்மை நிலை போக்க,
தர மானசீருடடை தந்து
சாவை தடுத்திட சத்துணவு தந்து,
வயிற்றுப் பசி போக்கி
வளம் தரும் நீர் நிலையும் தந்தாய்.
பொருள் தேடுவோர்க்கு
நற் தொழில் தந்து,
பட்டறிவுச் சமூகத்தில்
படிப்பறிவு தந்தவனே,
வெட்டவெளி காற்றினிலே
காலா காந்தி கானமடா
அறியா மைக் காரிருள் கண்ட
கல்விக் கண் திறந்த
கருப்புத் தங்க ஜோதியடா,
காலனின் காலடி சேர்ந்தாலும்
காலமும் உன் புகழ் பாடுமடா.
Comments