திருமணத் தீர்வு
பல்லாயிரம் பெண்களை பார்த்திடவே
கன்னியர் கண்களில் கண்கள் கலந்திடவே
மயக்கம் தயக்கம் வந்தடையும்
மங்கையின் மதிமுகம் மனங்கவர.
எண்களிருந்து என்ன பயன்
எதற்கும் அடங்கா பேரழகின் முன்னே
சொற்கள் இருந்து என்ன பயன்
சொக்க வைத்திடும் நாணச் சொர்க முன்னே.
ஊடல் உடலில் ஊடுருவ
அரவணைத்திட இரு கை காத்திருந்து
கை கோர்த்திட சித்தக் கிறக்கத்தால்
காமம் சிதைந்து சிரித்துச் சிதறும் சில்லறையாய் .
முறை அற்ற தகாத உறவதனில்
முகம் சுளிக்கக் காரியம் செய்வதற்கு
வளரிளம் பருவ வரவதனில்
மணவாழ்க்கை என்பது தீர்வாகும்.
Comments