' தமிழ் '
தானாக பிறந்து ,
ஓசை உரு அறிந்து ,
தமிழாக எழுந்து ,
தமிழாக எழுந்து ,
தரணியில் உயர்ந்து
உணர்வுக்குள் புதைந்து ,
உணர்வுக்குள் புதைந்து ,
உயிருக்குள் புகுந்து ,
உயர் புகழ் அடைந்து ,
உயர் புகழ் அடைந்து ,
உறவாடும் விருந்து ,
அறிவுக்கு மருந்து,
அழகான அமிழ்து ,
இலக்கணம் வகுத்து ,
இலக்கணம் வகுத்து ,
இலக்கியம் துளிர்த்து ,
மண்ணாக படர்ந்து ,
மறைகளில் மலர்ந்து ,
மறைகளில் மலர்ந்து ,
பண்பாடு அடைந்து ,
பழமையில் பழுத்து ,
வீரங்கள் நிறைந்து ,
விண் துளியென வீழ்ந்து ,
நீராறாய் விரிந்து ,
காதலில் கரைந்து ,
கடலாக பெயர்ந்து ,
மொழிக்கடல் பிறக்கத் தாய்மை கொண்ட
தமிழ்க் கடலானாய் தமிழே.
அடிமைக்கும் மடமைக்கும் ஆயுதமானாய்
உலகுக்கும் உயிருக்கும்
உணர்வுக்கும் உயர்வுக்கும்
உரிமை என்றானாய் தமிழே.
அடிமைக்கும் மடமைக்கும் ஆயுதமானாய்
உலகுக்கும் உயிருக்கும்
உணர்வுக்கும் உயர்வுக்கும்
உரிமை என்றானாய் தமிழே.
Comments