' காதலும் ' ' காலனும் '
காதல் மனங்கள் இணையும் திருமணம்
இங்கு சாதி கலவர காலனின் சிறையினிலா ?
உயிர்கள் பிரிந்தும் காதல் மலர்வது
சமாதி எனும் கல் அறைதனிலா ?
கால மாற்றம் நேருகையில் - காதலின்
தோற்றம் கௌரவ கொலைகளின் வடிவினிலா ?
கொலை நடந்தாலும் கொஞ்ச பாசம்
பந்தங்கள் சிந்திடும் கண்ணீரிலா ?
காதல் என்பதை ஆயுதமாக்குதல்
காமம் அதனை தேடிடவா?
நாசம் செய்யும் நாய் இவனென்று
தாயின் வாயாற் கேட்டிடவா ?
சிற்றின்பத்தில்
பேரின்ப பேயினை கண்டவனை
கண்டவன் என்றிடும் தாயின் குரல்.
கொச்சை காதல் உள்ள வேளையில்
கொண்ட காதலை வென்றிட நினைப்பவரை
மத வெறி கொண்டே மதியிழந்து
பிள்ளையின் உயிரைப் பருகுதல்
வேண்டாம் கொலை புரிந்து.
Comments