' இயற்கையாம் இறைவன் '

உல்லாச உலகில் உற்சாக இறவு ,

உன்னோடு தான் நிலவே என்னுடைய  உறவு.


இரவுக்குக் கோடிக்கண் வைத்தான் - அவன் 


பகலுக்குள் வேடிக்கை படைத்தான்,


வாழ வளமுள்ள நிலத்தை வாடகை விடுத்தான்


சுயநலத்தால்  இயற்கையை மனிதன் அழித்தான்.


பணம் எனும் காகிதம் பெற - தம் 


நற்குணங்களைப் பாடையில் விடுத்தான் ,


ஓர் நாள் அவனும் துடித்தான் ,


காசது மாசென் றுணர்ந்தான் ,


எல்லாம் கால் தூசுக்கு நிகரென அறிந்தான் ,


மாண்டதும் மீண்டும் இயற்கையோ டிணைந்தான்


ஆதியும் அந்தமும் அதுவெனத் தெளிந்தான் ,


பின் இறைவன் என்பதே இயற்கையென்றான் .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை