' நட்பு '
கடவுளின் கரமது வரம் தரலாம்
நட்பின் வரமது வாழ்வு தரும் .
சிற்பச் சிலையது கடவுளல்ல
சிறப்பை சேர்க்கும் நட்பே கடவுளென்பேன்
மலர் வளையம் இறப்புக்கு அழகூட்டும்
நினைவலையும் நட்பை அழகாய் நினைவூட்டும்
என்றும் நறுமணம் வீசும் பூந்தோட்டம்
நட்புச் சாலையில் மனிதர்களிடையே
கடவுள் செல்கிற தேரோட்டம்
நட்பின் சிறப்புகள் தொடரட்டும் ஏழுலகு
நட்பினால் தானே இந்த பூவுலகு .
மனிதராய் பிறந்த நாமெல்லாம்
தூண்டிலில் சிக்கும் மீன்களல்ல ,
கூண்டினில் வாழும் கிளிகளல்ல ,
இதயக்கூண்டின் கிளியாக - இருக்கும்
நட்புக்கிணை இங்கு ஏதுமில்ல .
Comments