' நவீன உலகில் நான் பாவப்பட்டவன் '

சொல்லாமல் விட்டதும் ,
சொல்ல முடியாததும் ,


கரும் புள்ளிகளை கடந்ததும் ,
கனவுகளை சுமந்ததும் ,


அவமானம் கடந்ததும் ,
அழுகைகள் வழிந்ததும் ,


ஆசையின் தூண்டலும் ,
அடக்குமுறை தவிப்பிலும் ,


வலி தந்த சுற்றமும் ,
நல் வழி தேடும் உள்ளமும் ,


மற்றவனின் கண்களில் குற்றவாளி யாவதும் ,
மனிதனாய் விளங்கிட விட்டு விலகிச் செல்வதும் ,


படைப்பினில் மாற்றமும் ,
ஆண் பெண் தோற்றமும் ,


தகாத சொல் கேட்டு தாங்காத செவிகளும் ,
அதில் துணிந்தே திகழும் திருநங்கைகளும் , 


சொல்லாத  பொல்லாத வாழ்வியல் ,
ஓரினச் சேர்க்கையெனும் பாலியல் .


Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை