' ஈரோடு '

திங்கள் இரவினில் திங்கள் ஒளிச் சுடர் ,
தங்கியே எங்கும் திறண்டு நிற்கும் ,

மக்கள் கூட்டம் மானம் மறைக்கும் ,
ஆடைச் சந்தையை நோக்கி நிற்கும் ,

இங்கே திராவிடத் தந்தைக்கும் இடமிருக்கு ,
மஞ்சள் மாநாகரென மற்றொரு பேரிதர்க்கு ,

கொங்கு மண்டலம் ஈரோட்டில் ,
கவுண்டர்கள் உறவுகள் படர்ந்திருக்கு ,
அதர்க்குள் கனிவுத் தமிழும் அடங்கிருக்கு ,

சத்தியமான சாத்திய இயற்கை ,
சத்திய மங்களம் தனிலே ஒழிந்திருக்கு ,

சந்ததி காக்க நினைத்த ஒருவனுக்கு ,
சந்தனக் கடத்தல் வீரப்பன் என பெயரிருக்கு ,

அர்த்தனாரிக்கும் மலை இருக்கு ,
அண்டை நாமக்கல்லில் அடங்கிருக்கு ,

ஊரின் உயர் புகழ் சொல்லிடவே ,
ஊரட்சிக் கோட்டை மலை இருக்கு ,

கர்னாடகத் தண்ணீரை எதிர்ப் பார்த்து ,
வறண்ட காவிரியும் வழியில் விழிவைத்து காத்திருக்கு ,




இத்தனையும் ஈரோட்டில் ,
இதற்கும் இடமுண்டு வறலாற்றில் .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை