' பிறப்பின் சிறப்பு '

மண்ணிலே பிறந்து ,

மண்ணிலே மடியும் , 

மனிதப் பிறவியிலே ,

மனிதனின் ஆதி அந்தம் 
அடங்குவ தென்னவோ அம்மணமொன்றிலே .



உடலை உயிரும் விட்டுப் பிரிந்திட ,
குப்பை போலே மண்ணில் மடிந்திட ,
உதவியாய் உறுப்பினை தானம் செய்தால் 
உறுப்புகளால் உயிர் வாழ்ந்திடவே ,
ஓர் உயிருக்குறுதுணை ஆகிவிடும் .



பிறப்பும் இறப்பும் சமமென இருக்கும் ,

மனதில் பணமோ ஏற்றத்தாழ்வினை படைக்கும் ,

வரமாய் நமக்கும்  வாழ்க்கை கிடைக்கும் ,

வாழ்வின் பலனது தானத்தால் சிறக்கும் .


Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை