' சுயநலமெனும் சுடுகாடு '

அன்னை மொழி மறந்துப்புட்டு ,
ஆடம்பரம் தேடுறோம் ,

ஆங்கிலேய மோகத்துக்கு ,
அடி பணிஞ்சு ஆடுறோம் ,

ஆடைகள கிழிச்சு விட்டு ,
அரகொறயா திரியிறோம் ,

மானங்காத்த ஆடை மறந்து ,
மானமின்றி வாழுறோம் ,

ஆழம் பாக்க கால விட்டு ,
ஐந்நூறுக்கு ஆள விட்டோம் ,

வாக்கு பிச்சை போட்டதுக்கு ,
வாழ்க்கையவே தொலச்சிபுட்டோம் ,

சோதியான இறைவனையும் ,
சாதிக்குள்ள தினிக்கிறோம் ,

சாதி இல்லனு சொல்லிகிட்டு ,
சாதி சலுகை வாங்குறோம் ,

ஊருக்காக வாழுறேன்னு ,
வேசமிட்டு சுத்துறோம் ,

காசு பணத்த சேத்தவுட்டு ,
கட்டையில வேகுறோம் ,

உடம்ப விட்டு உசுரு போக ,
பிணமாக போகுறோம் ,

சுய நலத்தால் வாழ்க்கையவே ,
சுடுகாடா மாத்துறோம் ,

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை