' கல்விச் சந்தை '

பிள்ளைகளின் மழலை 
மொழி மாறவில்லை ,

குழந்தைகள் கல்விக்காய் 
கரு தரிப்பதில்லை ,

கடன் வாங்க துடிக்கும்
பெற்றோருக்குப் பஞ்சமிங்கு இல்லை ,

கல்வியை தொழிலிருந்து 
தடுக்க வழியுமில்லை ,

தலைமுறை படிக்கா பாடத்தினை ,
கல்விச் சுமையென தூக்கும் ,
தலைவிதி கொண்ட - குழந்தையை விட
பாவமிங்கு யாருமில்லை 
குழந்தையின் வலிக் குரல் 
யாருக்கும் கேட்கவில்லை ,

பாசம் பகிர்ந்திட பெற்றோர்க்குத் தோன்றவில்லை ,
பாசத்தை வெல்ல 
பாடம் கற்றுத் தருவதில்லை ,

பாருக்குள் பிள்ளைகள் காணும்
கொடுமைக்கிங்கு அளவே இல்லை.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை