' குமரியும் ' ' குமுறலும் '
எட்டுத்திசை உள்ளது ,
எத்திசையும் இவன் உயிரை துச்சமென எண்ணுது ,
தாக்கம் கண்ட தலைநகரை செய்தி சொன்னது ,
ஏக்கம் கொண்ட குமரிக் குரலும் நீதி கேட்குது .
காற்றும் புயல் வழி புரட்சி செய்தது ,
குமரியும் குமுறல் காட்சியானது ,
பசியை போக்க படகில் சென்றவன் ,
பாடையில் வரும்நிலை யாகியது .
பாரில் படர்ந்த நீருமிங்கு ,
பாவப் பட்டவன் கண்ணீராகியது ,
ஆலோசனைக்கென அரசும் அங்கே கூட்டம் போட்டது ,
கணக்கைக் கோடிக்கணக்கில் காட்டிக்
கொள்ளையடிக்கப் பாக்குது ,
அழுகுரலிங்கு முரசாய் அவன் உயிர்ப் பிரிவைச் சொன்னது ,
உழவன் நிலம் போல் இவனது வாழ்வும் (தரி)சாக உள்ளது .

Comments