' ஓவியம் ஓர் காவியம் '

எண்ணங்களின் உருவம் ,

பல வண்ணங்களின் வாழ்க்கை ,

கற்பனையின் பிரசவம் ,

வெற்று காகிதத்தின்  இதயம் .


எழுத்துகளின் பிறப்பிடம் ,

கருத்துகளின் போர்க்களம் ,

குரலற்றவன் ஆயுதம் ,

சுவற்றில் வெறும் சித்திரம் .


உருவகத்தின் உறைவிடம் ,

திரைப்படத்தின் வசிப்பிடம் ,

வரை கோடுகள்  வடிவம் தரும் ,

அது ஓவியமென்றாகிடும் .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை