' போராட்டம் '
மண்டியிட்ட ஆட்சியில் சண்டைப் போட்டு வெல்லுவோம் ,
மாண்டுவிட்ட போதிலும் போராடியே வீழுவோம் .
மாண்டுவிட்ட போதிலும் போராடியே வீழுவோம் .
வாக்களித்த அரசுமின்று
வாய்க்கரிசியை போட்டது ,
அடையாளமாகிய
அடையாளமாகிய
கைவிரல் மையது ,
அநியாயம் நடத்திட
அநியாயம் நடத்திட
போட்ட திட்ட பொய்யிது ,
கறை வேட்டி கரை சேர ,
மக்களையும் கப்பலாக்கி ,
மூச்சு திணற மிதக்கவிட்டு
முதுகின் மேலே மிதிக்குதே,
வாக்குப் பிச்சை கேட்பதும் வழக்கமாகிப் போனதே .
காந்திப் படமொன்றுதான்
காகிதத்தில் வந்ததால் ,
காசுக்காக செய்யும் வேலை காந்தியமென்றாகுமா ?
இலை தழையில் உடையணிந்தான் நாகரிகம் பிறந்தது ,
உழவரின உடுக்கை இழப்பு உரிமை இன்மை உணர்த்துது .
பகல் நன்பகல் இடையே
காசுக்காக செய்யும் வேலை காந்தியமென்றாகுமா ?
இலை தழையில் உடையணிந்தான் நாகரிகம் பிறந்தது ,
உழவரின உடுக்கை இழப்பு உரிமை இன்மை உணர்த்துது .
பகல் நன்பகல் இடையே
நான்கே மணி நேரம் தான் ,
போராட்டமே வாழ்வென்றால்
போராட்டமே வாழ்வென்றால்
நாளும் நமக்கு பாரம் தான்.
Comments