' அறிவியலால் அடிமையானோம் '

இது அவசர ஞாலம் ,
வீனாகும் காலம் ,
அடிமை ஆகுது ஞானம் ,
இங்கே எல்லாம் ஊனம் .

மரணமே வாழ நினைத்தாலும் ,
மனிதன் உருவில் உழைத்தாலும் ,
தருணத்தில் மரணத்தை மரணிக்கும் ,
தேடலற்ற வாழ்வின் நிலையாகும் உயிரை பலி வாங்கும் .

காகிதமென்பது நயகனாகுது அதற்கோ நம்மை ,
நாய்ப் போல் நடித்து வாலை ஆட்டச் சொல்லுது .

எதிர்த்து நின்றால் எகிரிப் பாயுது ,
பதுங்கி வாழ்ந்தால் பாம்பாய் சீறுது .

நெஞ்சம் உருகுது கோபம் வருகுது ,
தஞ்சம் அடைந்திட ரௌத்திரம் தேடுது ,

நித்தம் ரத்தம் சிந்தத் துடிக்குது ,
எஞ்சும் காலம் நிம்மதி கொஞ்சம் ,
வேண்டுமென்றே வேகம் கொள்ளுது ,

எழுவாவ் துணிவாய்  எவனும்
விழுவான் காலில் பணிவாய் .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை