' தன்னம்பிக்கை '
தட்டி கேட்க நினைத்தால் - சிலர்
வெட்டி கொன்று போடும் - இங்கே
கவலையின்றி வாழ்ந்தால் - நம்
முயற்சி வெற்றி பெரும் காலம்.
கொட்டி கொட்டி கொடுக்கும் கைகள் ,
பிறரை குட்டி குட்டி பறிக்கும்
கொட்டி கொட்டி கொடுக்கும் கைகள் ,
பிறரை குட்டி குட்டி பறிக்கும்
சிந்தை சீற்றமாகும் பொழுது ,
ரத்தம் கூட கொதிக்கும்
நித்தம் போராடிடவே துடிக்கும் .
எச்சம் மிச்சம் எல்லாம்
எச்சம் மிச்சம் எல்லாம்
இங்கே உச்சம் கொள்ள ,
லட்சக் கணக்கில்
லட்சக் கணக்கில்
லஞ்சம் கேட்டு
நித்தம் தொல்ல.
இனிமேல் இங்கே இல்லை
யாரும் நம்மை வெல்ல
தன்னம்பிக்கை கொண்டால் போதும்
நல்வழியில் நாமும் நடந்துச் செல்ல.
முயற்சியோடு பயிற்சி எடு ,
தோல்வியிலும் எதிர் நீச்சலிடு ,
புலியென பதுங்கிப் பாயாமல்
அங்கம் முழுதும் ரௌத்திரம் கொண்டு ,
அங்கங்கே நாம் பொங்கி எழுந்தால் ,
என்றும் வெற்றி தங்கும் நம்மைச் சுற்றி .
மது மாது மத சாதி
தோல்வியிலும் எதிர் நீச்சலிடு ,
புலியென பதுங்கிப் பாயாமல்
அங்கம் முழுதும் ரௌத்திரம் கொண்டு ,
அங்கங்கே நாம் பொங்கி எழுந்தால் ,
என்றும் வெற்றி தங்கும் நம்மைச் சுற்றி .
மது மாது மத சாதி
மனிதனின் விரோதி
எல்லாமும் அகன்றுவிட்டல்
நாமே தூய்மையின் அகராதி .
Comments