' ஜல்லிக்கட்டு '

வீரத்துக்கு பேரு போன மண்ணு இது ,
இங்க மாடு கூட மானங்காக்க துணியுது ,

எங்க நாட்டு கலாச்சாரப் பண்பு இது ,
பாரே எங்க விளையாட்ட வேடிக்க பாக்குது ,

திமிலுள்ள காளையென திரியுது - இங்க 
திமிரா எகிரிப் பாயுது ,

பல் ஆயிரப் பரம்பரை இனம் இது ,
வேட்டி கட்டும் மானத் தமிழ் கூட்டமிது ,
வீரங்காட்ட இளஞர்கள் ஆடுகிற ஆட்டமிது ,

திட்டந்தீட்டி தடை போட்ட கூட்டமது ,
எங்க போராட்டத்த பாத்து பயந்தோடுனது ,

வண்டி கட்டி தூக்கி செல்லும் போது அது ,
சுமை தாங்கும் எங்க வீட்டுப் புள்ள இது ,

பசி அடக்க மேச்சலுக்கு போகுமிது ,
படைய பார்த்து பாஞ்சிப்பாயும் காளையது ,

மண் புகழும் கொடி கட்டிப் பரக்குது ,
விண்ணை தாண்டி எங்கள் வீரம் ஒலிக்குது ,

துள்ளிக்கிட்டு மல்லுக்கட்ட துணியுது அது ,
ஜல்லிக்கட்டில் எட்டி முட்டத் துடிக்குது .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை