' நாளைய விடியல் '

இல்லாமை என்கிற பொல்லாத வறுமையும் ,
கல்லாமை என்கிற மதிக் கொல்லி நஞ்சும் ,
மது மாது என்கிற மனித மடமையும் ,
மாற்றம் ஒன்றில் மலராதிரட்டும் .

ஆயுத வன்முறை அடியோடொழியும் ,
ஒற்றுமையாய் உலகொரு நாள் அமையும் ,
அன்பெனுங் காதல் மருந்தாய் அமையும் ,
அன்று இன்னல் நோய்கள் இல்லாதழியும் .

விஞ்ஞானம் வீழ்த்திட்ட விவசாயம் விளையும் ,
உயிர்க் கொல்லும் மருத்துவம் துடித்தே சாகும் ,
மூதையர் மருத்துவம் முதன்மையாய் விளங்கும் ,
நம் மண்ணின் சிறப்புகள் புகழோடு திகழும் .

மதங்கள் அருங் காட்சியகத்தில் இருக்கட்டும் ,
அன்பெனும் மனிதம் எல்லோரிடத்தும் மலரட்டும் ,
மாற்றம் நம்மிலிருந்தே தொடங்கட்டும் ,
நல்லதோர் விதியாய் இதுவே நடந்திடட்டும் .

நாளைய விடியல் நம்மை நோக்கி ,
புன்னகைக் கொண்டே புலர்ந்திடட்டும் .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை