' காந்தி '

களமிறங்கி ஆடிச் சென்றான் ,
கதராடை அணிந்தவந்தான் ,

கருனை உள்ளம் கொண்டவந்தான் ,
காந்தி எனும் பெயரைக் கொண்டான் ,

அச்சமின்றி அகிம்சையை ,

ஆயுதமாய்  ஏந்தி நீ ,

இச்சை கொண்ட சுதந்திரத்தை ,

ஈன்ற தந்தை நீயன்றோ ,

உயர் தேசந் தாங்கினாய் ,

ஊன்றுகோல் கொண்டு நீ

எண் திசையிற் பாதியில் 
எங்கெங்குமுன் புகழ்

ஏற்ற மிக்க வாழ்விலே எளிமையாய் வாழ்ந்தவன் ,

ஐய்யா உன் பெயர் போதும் 
அந்நியனும் ஐயமுற ,

ஒழிந்தது உன் உயிர் மட்டும் ,

ஓங்கியதுன் புகழ் வான் முட்டும்.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை