' பெண் படும் பாடு '
பிறப்பின் இயற்கை மாறுதலால் ,
அந்நாட்களில் விலகும் உறவுகள் ,
அவளுள வேதனை எண்ண மறப்பது ஏன் ,
அவளுக்கன்பை தர தவிற்பது ஏன் ?
மரணத்தின் வாயில் வரை ,
எட்டிப் பார்க்க வைக்கும் வலி ,
பெண்ணாக பிறந்தவர்கள் தப்பிக்க ஏது வழி .
கழிவறை இல்லா கிராமத்தில் ,
கவலையான காலத்தில் ,
கழிக்க முடியா கோலத்தில் ,
கண்ணீரில் காலந்தள்ளிய
பெண் பிறப்போ
இன்றைக்கும் பல அவலத்தில் .
பெற்றெடுக்க பத்து மாதம் சுமக்கிறாள் ,
பிள்ளை தாங்க வலி பொறுக்கிறாள் ,
பிறக்கும் நேரம் துடிதுடிக்கிறாள் ,
பிள்ளைக்கு உயிரைப் பாலாக கொடுக்கிறாள் .
பெண்மைக்கும் வாழ்க்கைக்கும் இடையே
அவள் போராடியே உயிர் வாழ்கிறாள் .
Comments