' மனம் ஓர் குப்பை தொட்டி '


இனிக்கிற வாழ்க்கையில் ,
இழக்குற நிம்மதி ,
இருக்குற குப்பைக்கு ,
இடமென மனம் இருப்பதனால் .


பாசம் படர்ந்த மனதில் ,
வேசமிட தூண்டும் பொழுதில் ,


பேராசை என்கிற  பேயும் ,
ஆடம் பரமெனும் நோயும் ,
பொய்மை எனும் அதன் தாயும் ,
சிற்றின்பம் தருகிற காயம் ,

எல்லாம் மனதில் சீறிப்பாயும் ,
நிம்மதி கெடுக்கும் காலன் ஆகும் ,
மனதைக் குப்பை தொட்டியாக்கும் ,
வாழ்வும் இதனால் நொடிக்கும் ,
நம்மை ஏளனச் சிரிப்பால் சிதைக்கும் .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

மனைவி

அவளன்பழகன்

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

விடுதலை பறவை

சுனிதா வில்லியம்ஸ்