' வளமான வாழ்வு '

தனி மனிதனை ,
தடம் பதித்திட , 
வழி நடத்திடும் , 
விதி யாரறிவார் .

வரும் தடைகளை , 
தரும் வலிகளை , 
பெரும் வரமென , 
இங்கு யாருணர்வார் .   

செய்யும் முயற்சிகள் , 
முறை பயிற்சிகள் , 
தரும் புரட்சியை
விதைத்திட யவர்வருவார் .

கை விரல் மை , 
நம் உரிமை , 
தரும் தலைமை , 
எனும் நிலமையிலே , 
பெரும் கொடுமை , 
தடுத்திட யவர் பிறப்பார் .

மான்புறும் மனைவி , 
மனவாளன் துணைவி , 
மக்கட்கு இறைவி , 
என குடும்பம் மேவிடுவார் .

தள்ளாத வயதில் , 
கிடைக்காத உறவை ,
மரணத்தின் பிடியிலும் , 
எண்ணாது வாழ பழகிடுவார்.  

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை